மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் சென்னை வடபழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.45 மணிஅளவில் விவேக் காலமானார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும், கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு திரைப்படம் வெளியாகியிருந்தது.
மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் இதுதான்.🙏 pic.twitter.com/OxCXatXSkZ
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) April 17, 2021
விஜய், அஜித் போன்ற பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்த விவேக் இதுவரை கமல்ஹாசனின் படங்களில் நடித்ததில்லை. இதையடுத்து கமலின் இந்தியன்-2 படத்தில் விவேக் நடித்த வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விவேக் கடைசியாக லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் தான் நடித்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.