சாய் பல்லவியின் புதிய படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் தற்போது ‘விராட பருவம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இவர் நக்சலைட்டாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் ராணா இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ராணா போலீஸ் அதிகாரியாக மிரட்டும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் வலை வேகமாக வீசி வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இதனால் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதற்கு படக்குழு தயங்கி வருகிறது. அந்த வகையில் ‘விராட பருவம்’ திரைப்படத்தின் ரிலீசையும் படக்குழு தள்ளி வைத்துள்ளது. இச்செய்தி எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.