அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்தோனேசியா பகுதியில் கண்மூடித்தனமாக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார், பின்னர் தன்னைத்தானே ஏன் சுட்டுக் கொன்றார் என்பது அனைவரிடத்திலும் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க மாகாணம் விசாரணை நடத்தி வருகின்றது.