காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுர கதவினுள் சிக்கியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இதில் அமைந்திருக்கும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலினுடைய கோபுரத்தின் கதவை பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலினுள் காவலராக பணிபுரியும் நபரும், பக்தர்கள் 2 பேரும் சேர்ந்து அதனைத் திறக்க முற்பட்டனர்.
இதனையடுத்து ஒரு பக்கத்தின் கதவைத் திறந்ததும், மறுபக்கத்தினுடைய கதவை திறக்க போகும்போது திடீரென்று காற்று வீசியது. இதனால் கதவு சட்டென்று மூடியது. அப்போது அருகில் நின்ற 3 பேரும் கதவில் சிக்கி காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்