Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுபாடுகளை நெகிழ்த்த முடிவு ..!!காரணம் என்ன ?வெளியான தகவல் ..!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை நெகிழ்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளதாவது  ஏப்ரல் 19 ல் இருந்து உணவகங்கள், மதுபான விடுதிகளில்  போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண ,குடிக்க அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றாலும் கட்டுப்பாடுகளை நாம் ரிஸ்க் எடுத்துதான் நெகிழ்த்தி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரான  அலன் பெர்சேட் கூறியுள்ளார். மேலும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் சில நெறிமுறைகளை வகுத்துள்ளனர்.

அதன்படி தொற்று வீதம் 14 நாட்களுக்கு 5 % குறைவாக இருக்க வேண்டும் .மேலும் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 25 % குறைவாக இருக்க வேண்டும் .ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்று பரவும் எண்ணிக்கை ஒன்றுக்கு கீழே இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நாட்டில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த முடியும் என்று கூறியிருந்தார்கள். இதன்படி தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் 23 % கீழே வந்துள்ளதை தவிர வேறெதுவும் நடக்கவில்லை.மேலும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது .

இருப்பினும் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த அரசு முடிவு செய்துள்ளதற்கு  காரணம் என்னவென்றால் ,சுகாதார அதிகாரிகள் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா தொற்று சுவிட்சர்லாந்தில் அதிகமாக இல்லை என்று கூறுகின்றனர். அதற்கு உதாரணமாக கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்  என்று அஞ்சியதாகவும் ஆனால் மருத்துவமனையில் சமாளிக்கும் அளவிற்கு தொற்று நோயாளிகள் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று தொற்றின் காரணமாக பலி எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை என்றும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படியும் நடக்கவில்லை என்றும்  கூறுகின்றனர்.

Categories

Tech |