வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் சந்திராவின் குடும்பத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அருகில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர் வேலை செய்ய விடாமல் தடுப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகும் காவல் துறையினர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து வீடு கட்டுவதற்கு இடையூறு இல்லாமல் தங்களுக்கு உதவ வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.