நெல்லையில் ஆட்டை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்த ஆடு மர்ம நபரால் திருடப்பட்டது. இதனால் பிச்சையா அதிர்ச்சியடைந்து மன உளைச்சலில் இருந்தார். மேலும் இதுகுறித்து பிச்சையா சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, அதனை கீழே தேவநல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டி என்பவர் ஆட்டை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.