Categories
உலக செய்திகள்

மொத்தம் 8 பேரின் உயிர் போச்சு…. போலீஸ் சரியாக கடமையை செய்யவில்லை…. குற்றம் சாட்டினார் நீதிபதி குளோரியா….!!

மூன்று பேர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் போலீசார் சரியாக விசாரணை செய்திருந்தால் மேலும் 5 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என நீதிபதி குளோரியா தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஓரினசேர்க்கை கிராமம் ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்த மஜீத் கேஹன், ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் அப்துல் பசிர் ஃபைசி ஆகிய மூவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து 2012ஆம் ஆண்டு போலீஸ் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் இவர்கள் மூவருடனும் தொடர்பு வைத்திருந்ததாக புரூஸ் மெக் ஆர்தர் என்பவரை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.

ஆனால் 2018 ஆம் ஆண்டு வரை அவர் கைது செய்யப்படவில்லை. இவ்விரண்டிற்கும் இடையில் புரூஸ் மெக் ஆர்தர் மேலும் 5 பேரை கொலை செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிபதியான குளோரியா ஜெபஸ்டின் என்பவர் போலீசார் சரியாக விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரி பல தடையங்களை கவனிக்காமல் விட்டிருக்கிறார்.

அவர் மட்டும் தன் கடமையை சரியாக செய்திருந்தால் மேலும் 5 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஜூனியர் என்பதால் அவருடைய மூத்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை அதிகாரிக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர்களும் கோட்டை விட்டு விட்டார்கள் என நீதிபதி குளோரியா கூறியுள்ளார்.

Categories

Tech |