காங்கிரஸ் கட்சி சார்பில் ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . வருகிற 24-ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பப்படும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தற்போது ஒவ்வொரு கட்சியினரும் ஒரு சேனலை வைத்து நடத்தி வருகின்றன. அதன்மூலம் தங்கள் கட்சி செய்யும் நன்மைகளையும், மற்ற கட்சிகள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும், ஐஎன்சி டிவி என்ற பெயரில் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. சில ஊடகங்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அக்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
24ஆம் தேதி முதல் நிகழ்ச்சிகள், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன் முயற்சியான பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி வருகிற 24-ஆம் தேதி முதல் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு உள்ளதாக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த சேனல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒளிபரப்பாகும் .எட்டுமணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் பேட்டிகள் கருத்துக்கள் ஒளிபரப்பப்படும்.
இதன் தொடக்க விழாவின்போது யூடியூப் சேனல் முதல் நிகழ்ச்சியாக சுதந்திர போராட்டத்தில் பத்திரிக்கையாளராக மகாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இந்த பத்திரிக்கைகளில் காந்தி எழுதிய கட்டுரைகள் தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன. யூடியூப் சேனல் தொடங்குவது குறித்து ராகுல் காந்தி கூறுகையில் பல்வேறு வகையான கருத்துக்கள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும். யூடியூப் சேனல் படிப்படியாக பிராந்திய மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.