Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. 2300 பேரின் உயிரை காப்பாற்றியது…. வளிமண்டல நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

கொரனோ ஊரடங்கு காரணமாக 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என வளிமண்டல நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போட்டதால் தான் 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என Air et Santé  வளிமண்டல நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் ஊரடங்கு போடப்பட்டதால் போக்குவரத்து சேவை முற்றிலும் தடைபட்டது மேலும் வெளியே செல்ல அனுமதி இல்லாததால் தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் எரிபொருட்கள் மூலம் வரும் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) முற்றிலும் குறைந்து காற்று மாசடைதல் தடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே கடந்த 2011 முதல் 2019 ஆம் ஆண்டில் காற்று மாசடைவால் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா  ஊரடங்கு தடையின் காரணமாக 2,300 பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |