Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் வரைந்த அழகிய ஓவியங்கள்… நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின்  அண்ணாத்த, செல்வராகவனின் சாணிக் காயிதம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை ஓவியமாக ரசிகர்கள் வரைந்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இன்று ஏப்ரல் 15ஆம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தன்னுடைய ஓவியங்களை வரைந்த ரசிகர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |