Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம்…. பரூக் அப்துல்லா எங்கே..? டிஆர் பாலு கேள்வி…!!

நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா எங்கே என்று திமுக மக்களவை உறுப்பினர்  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார்.

நேற்று நடைபெற்ற  பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான  எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

lok sabha amit shah க்கான பட முடிவு

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.  இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி  ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில் , ஜம்மு தலைநகர் ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கைது

இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படட போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டிஆர் பாலு கூறுகையில் , அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது மக்களவை எம்பி பரூக் அப்துல்லா -வை சிறை வைத்தது தவறு.நாடாளுமன்ற உறுப்பினர் உமர் அப்துல்லா எங்கே என்று  டிஆர் பாலு கேள்வி எழுப்பினார்

Categories

Tech |