சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுஹூவாவின் பெய்லின் மாவட்டத்தில் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக தெரிகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் தனது மேலதிகாரியை தரை துடைக்கும் கட்டையால் சரமாரியாக தாக்கி கையில் கிடைக்கும் பொருட்களையும் அவர் மீது வீசியுள்ளார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பாலியல் துன்புறுத்தல் செய்த உயரதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
கடந்தவாரம் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் தான் தற்போது மேலதிகாரியை தாக்கியுள்ளார். இதுகுறித்து சீன பெண்ணிய ஆய்வாளரான லு பின் கூறுகையில், “நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கும் சட்டத்தை உருவாக்கவில்லை என்றால் பெண்களின் கோபம் இப்படிதான் வெளிப்படும் என்பதை இந்த காணொளி எடுத்துக்காட்டுகிறது.
பல நேரங்களில் இதுபோன்ற பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் அமைதியாக கடந்து விடுகின்றனர் ஆனால் இந்த காணொளியில் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் வைத்து அந்தப் பெண் உயர் அதிகாரியை தாக்குகிறார் என்றால் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
https://youtu.be/WtLyPq–0ts