புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வயலின் வாசித்து பல நாடுகளில் பணம் திரட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் ஸ்வப்பன் செட் (77 )மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர்.ஸ்வப்பன் செட் சிறந்த வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்வப்பன் சேட்டின் மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஆகையால் பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடிபோனாள். இதனைத்தொடர்ந்து தனக்கு தெரிந்த வயலின் கலையை வைத்து பணத்தை ஏற்பாடு செய்வதற்கு ஸ்வப்பன் முடிவுஎடுத்தார். அவர் எடுத்த முடிவின்படி கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வயலின் வாசித்த தனது மனைவிக்காக பணத்தை திரட்டினார் .
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு மனைவிக்கு நல்ல முறையில் புற்றுநோய் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஸ்வப்பன் செட் மனைவி தற்போது குணம் அடைந்துள்ளார். தன் மனைவிக்காக 17 ஆண்டுகள் நாடு நாடாகச் சென்று வயலின் வாசித்து அதன் மூலம் பணம் திரட்டிய ஸ்வப்பன்சேட்டை குறித்து ட்ருஷா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.