தேனியில் சூரியன் நேர் உச்சியை கடக்கும்போது பொருளின் நிழல் கீழே விழாத அதிசய நிகழ்வு காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன உலகம் பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப சூரியன் மேல் உச்சியை கடக்கும் போது அதனுடைய ஒளிக்கதிர்கள் படும் பொருள்களின் நிழல்கள் தரையில் விழாத நாட்களும் உண்டு என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளரான சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக சூரியன் நேர் உச்சியை கடக்கும்போது நிழல்கள் தரையில் விழாத அதிசய நிகழ்வு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியிலிருக்கும் சிறுவர், சிறுமிகள் மிகவும் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.