Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”போலீஸ் அதிரடி” ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது..!!

சேலத்தில் போலீஸ் அதிரடியால் ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படையினர் மேட்டூர், கருமலைக்கூடல், ஜலகண்டபுரம், ஓமலூர் மற்றும் கெங்கவல்லி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Related image

 

இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான பூபதி, பிரசாந்த், கோபி மற்றும் சசிகுமார், ரத்தினவேல்,பிரகாஷ் உள்ளிட்ட  52 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். மேலும் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையானது சேலம் மாவட்டம் மக்களிடையே பெரும் அச்சத்தை போக்கியுள்ளது.

Categories

Tech |