Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரின் புதிய படம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தினை சேவியர் பிரிட்டோ தனது எஸ்பி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இதை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அஜித்தின் பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் படத்தினை பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் இணையும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |