பிரிட்டன் மகாராணியார் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் மூத்த குடும்ப உறுப்பினர்கள் ராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மகாராணியார் எலிசபெத் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் யாரும் ராணுவச் சீருடையில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் திரும்பியுள்ளார். அரச குடும்ப உறுப்பினர்களின் இறுதிச்சடங்கில் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் ராணுவச் சீருடையில் இருப்பார்கள் என்பது வாடிக்கையானது. ஆனால் தற்போது அரசு குடும்பத்தைவிட்டு இளவரசர் ஹரி வெளியேறியதால் ராணுவ சீருடையில் கலந்து கொள்ளக் கூடாது பதக்கங்களை மட்டுமே அணிய வேண்டும் என மூத்த கடற்படை தளபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினையில் இருந்து அரச குடும்பத்தை காப்பாற்ற ராணியார் இறுதிச்சடங்கில் மூத்த உறுப்பினர்கள் எவரும் ராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் பதக்கங்களை மட்டுமே அணிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ சீருடையில் இருக்கும்போது தன் பேரன் மட்டும் கவலைப்படுவான் என்பதால் ராணியார் இவ்வாறு தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.