கொரோனா வைரஸ் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்த போவதாக ஜெர்மனி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கொரோனா வைரஸ் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஜெர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பெரும் பகுதிகள் இப்போது ஒரு புதிய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும்.
அது இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்யாவசியமற்ற கடைகள் மூடப்பட வேண்டும் என்பதாகும். மேலும் 100000 பேரில் 200 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. Göttingen-ல் உள்ள Leibniz Institute for Primate Research நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் மாறுபாடுகளை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.
அதனால் மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தொற்றின் வேகத்தை குறைக்க அவசரகால பிரேக் விதிக்க வேண்டும் எனவும் 16 மாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்து இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளனர்.