தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் செந்தில் கொரோனாவிற்கு யாரும் பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் செந்தில். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் இருக்கிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு கொரோனா ஏற்பட்டது உண்மைதான். “கொரோனா ஏற்பட்டால் யாரும் பயப்பட தேவை இல்லை. ஊசி போட்டுக்கொண்டு தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்.மேலும் மாத்திரை, மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். நான் ஊசி போட்டுக் கொண்டதால் பெரிதளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதேபோல் நீங்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.