மதுரையில் நீத்தார் நினைவு தினத்தை அனுசரிக்கும் விழா நடைபெற்றது.
தமிழகத்தில் தென் மண்டலத்திலிருக்கும் 9 மாவட்டங்களிலுள்ள அனைத்து தீயணைப்பு நிலையத்திலும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர். அதாவது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியிலிருக்கும்போதே உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுகின்ற விதமாக ஆண்டுதோறும் நீத்தார் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் பெரியார் பேருந்து நிலையத்தின் பக்கத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலரான வினோத் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.