Categories
மாநில செய்திகள்

மறுவாக்குபதிவையொட்டி…. இன்று வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி…!!

மறு வாக்குப்பதிவை முன்னிட்டு வேளச்சேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

வாக்கு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மூன்று அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 17ம் தேதி சனிக்கிழமை காலை ஏழு மணி முதல் மாலை 7 மணி வரை தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் இன்று காலை முதல் மாலை 7 மணிவரை பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் உள்ள  548 பேர் வாக்குப்பதிவு வாக்களித்துள்ளனர். இதையடுத்து இன்று ஏழு மணியுடன் பரப்புரை நிறைவு செய்யப் படுகின்றது.

Categories

Tech |