மதுரையில் சுபாஷ் சேனா அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலிருக்கும் தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கோவில் திருவிழா தான் இந்த மாதங்களில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களில் ஊர் பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து திருவிழா நடத்துவதற்காக கமிட்டியை நியமிப்பார்கள். பின்னர் அதில் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
இதற்கிடையே தற்போது தமிழகத்தில் கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கோரி தமுக்கத்திலிருக்கும் மைதானத்தில் வைத்து சுபாஷ் சேனா அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.