பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ம் தேதி தலா ரூ.200 வீதம் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 8 பேரிடம் தலா ரூ.500 வீதம் 4 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் 174 பேரிடமிருந்து ரூ. 37,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.