Categories
அரசியல் மாநில செய்திகள்

மகனை முதல்வராக…. அவரை மட்டும் ரவுடியாக…. திருமா சொன்ன ”அவர்” …. யார் தெரியுமா ?

அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவர் மறைந்து விட்டார் பாவம் அவரை பற்றி சொல்ல கூடாது. எத்தனை மேடைகளில் பார்த்து விடலாமா? மோதி விடலாமா ? நீ பண்டார பையன் என்பார். சாதியை சொல்லி திட்டுவது. ஏனென்றால் இவர் இப்படி உசுப்பேற்றுவது, மேடையில்…. மகனை மட்டும் முதலமைச்சராக காட்டுவது, அடுத்த முதலமைச்சர் என சொல்வது.

ஆனால் காடுவெட்டி குருவை ரவுடியாக காட்டுவது. இன்றைக்கு அந்த சமூகத்தில் இளைஞர்களை தூண்டி விட்டு, இப்ப ரசியல் பேசி அரசியல் பேசி தான் அவனுக்கு கோபம் வருகிறது. ஏன் எதற்காக ? இப்பொழுது சூரியாவை கொன்றார்கள், கேளுங்கள் காரணம் சொல்லுங்கள். குத்திக் கொன்றவனே சொல்லட்டும் காரணம் ஏதாவது…. என்னை இழிவாக பேசிவிட்டார், அல்லது அவன் அருவாளை எடுத்துக்கொண்டு என்னை வெட்ட  வந்தான், அதனால்தான் அவனுக்கு பதிலடி கொடுத்தேன்,

என்னை தற்காத்து கொள்வதற்காக நான் தாக்க வேண்டியது இருந்தது, சொல்ல சொல்லுங்கள், நிதானம் இல்லாமல் செய்துவிட்டேன், சொல்லுவானா தெரிந்துதானே செய்கிறான். 20 பேரை திரட்டி தானே செய்கிறான், ஆயுதங்களோடு வந்துதானே செய்கிறான், அவன் தலித் என்று தெரிந்து தானே கொலை செய்கிறான் இந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது.

உன்னுடைய சொந்த  சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை, அவன் படித்து பட்டம் பெற்று, வாழ்க்கையை தேட வேண்டிய அந்த இளைஞர்களை வெறும் சாதி வெறியை தூண்டிவிட்டு, ஒரு சமூகத்திற்கு எதிரான வன்முறையாளர்களாக மாற்றுவது எந்த விதத்தில் நியாயம். இதை தான் நாங்கள் கேட்கிறோம். நான் வாதாடுவது தலித்துகளுக்காக அல்ல… அப்பாவி வன்னிய  இளைஞர்களுக்காக வாதாடுகிறேன். அந்த இளைஞர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன் என திருமாவளவன் வேதனைப்பட்டார்.

Categories

Tech |