புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் தேரோட்டத்தின் போது மூதாட்டியின் கழுத்திலிருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபாரம் பட்டியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை காணச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராணியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர்கள் தேரோட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வந்த காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.