ஹைதராபாத் அணியின் தோல்வியை பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் கருத்து தெரிவித்துள்ளார் .
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ,3வது லீக் போட்டியில் ,கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் கடைசிவரை போராடிய மனிஷ் பாண்டே-வின் பேட்டிங்கை பற்றி பலரும் ,தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கக்கூடாது. குறிப்பாக இறுதிவரை விளையாடிய மனிஷ் பாண்டே, அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பேர்ஸ்டோ அவுட் ஆன பிறகு, இவர் பார்மிற்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து, அவர் சற்று தடுமாறி விட்டார். அதுமட்டுமில்லாது அவர் பவுண்டரிகளையும் ,சிக்ஸர்களையும் அடிக்க முயற்சி செய்யவில்லை. எனவே மனிஷ் பாண்டே ஸ்டெடியாக நின்று ,தைரியமாக விளையாடி இருந்தால் ,நிச்சயம் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.