திருவாரூர் மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குன்னலூர் பகுதியில் ஜெபமாலை என்பவர் வசித்து வந்தார். இவர் அதிகாலை சாலையோரம் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று ஜெபமாலையை கடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜெபமாலையை மீட்டு அக்கம்பக்கத்தினர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு ஜெபமாலைக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெபமாலை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.