Categories
உலக செய்திகள்

4 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவை காண புறப்பட்ட பெண்….திடீரென வந்த மெசேஜ்….சுக்குநூறாக நொறுங்கிய இதயம்….!!!

தூபயிலிருந்து இங்கிலாந்திற்கு 4 வருடங்கள் கழித்து தன் தாயை பார்க்க வந்த பெண்ணிற்கு தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி பெற்றோர்களையும் குடும்பத்தையும் பிரிந்து துபாயில் 4 வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேரியின் பெற்றோர்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். அப்பொழுது திடீரென மேரியின் தாயாருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆகையால் அம்மாவைப் பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் துபாயில் இருந்து புறப்பட்டார்.

அதன் பிறகு விமானத்தில் வந்து இறங்கிய மேரி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு தனது செல்போனை ஆன் செய்துள்ளார் அப்பொழுது வந்தா குறுஞ்செய்தியில் மேரியின் தாயார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மேரி  விமான நிலையத்திலேயே கதறி அழுதார் . மேரியின் சத்தம் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள் வந்து  விசாரித்தபோது நடந்ததை கூறிய மேரியை அதிகாரிகள் சமாதானம்படுத்தினார்கள்.

இதனை  தொடர்ந்து மேரி 4 வருடங்களாக பிறந்திருந்தால் தாயை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் அவரின் முகத்தை ஆவது பார்க்கலாம் என்று நினைத்து விமான நிலையத்திலிருந்து கிளம்பிய போது மீண்டும் வந்த ஒரு குறுஞ்செய்தியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக துபாயிலிருந்து வந்ததற்காக மேரியை 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் ன்று சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இதனை பார்த்து மேரி மிகுந்த கோபமடைந்தார். மேலும் மேரி தன் தாயின் முகத்தையும் கடைசியில் பார்க்க விடாமல் செய்து விட்டார்கள் என்று பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டார். தன் தாயின் இறுதி சடங்கிற்கு ஜூம்  மூலம் தன் தந்தைக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாயின் இறுதிச் சடங்கிற்கு தந்தையே பல கிலோமீட்டர் காரில் வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இதை கேட்ட மேரி  தாயின் இறுதி சடங்கை செய்வாரா அல்லது பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி வந்து என்னை அழைத்து செல்வாரா? என்று கூறி இங்கிலாந்தின் மீதும்  இந்த கட்டுப்பாடு மீதும்  மிகுந்த கோபம் கொண்டார். மேரி மீண்டும் ஒரு முறை இங்கிலாந்திற்கு வருவதற்கே எனக்கு பிடிக்கவில்லை என்று உறுதியாக கூறியுள்ளார் .

இந்நிலையில் மேரி 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகாவது  தாயின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்வாரா என்று சந்தேகம் ஏற்படுகிறது.  மேரியின் தனிமைப்படுத்தலை  ரத்து செய்யக்கோரி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் மற்றும் பிரதமருக்கும் கொடுத்த மனுவிற்கு  தற்போது வரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆகையால் இது போன்ற சம்பவம் வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று மேரி மிகுந்த சோகத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |