41 வயதான கிறிஸ் கெயில் ,ஐபில் போட்டிகளில் அதிக சிக்சர் ( 350) அடித்த பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார் .
நேற்று மும்பை நடத்த ,4ஆவது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது .ஆனால் அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது.
எனவே 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி , பஞ்சாப் அணி வெற்றியை கைப்பற்றியது.இந்தப் போட்டியானது பஞ்சாப் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் விளையாடும், 133 வது ஐபிஎல் போட்டியாகும். பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இவர், நேற்று துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடினார்.
நேற்றைய ஆட்டத்தில் 2 சிக்சர்களை அடித்து ,ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். அதிக சிக்சர் அடித்த பட்டியலில் கெயில் 351 சிக்சர் ஏபிடி வில்லியர்ஸ் 237 சிக்சர் மற்றும் எம்எஸ் தோனி 216 சிக்சர் ஆகிய வீரர்கள் ,முதல் 3 இடத்தைப் பெற்றுள்ளன.
அதிகபட்சமாக கிறிஸ் கெயில், யாரும் எட்ட முடியாத அளவிற்கு 351 சிக்சர்களை அடித்து ,பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் ‘யுனிவர்சல் பாஸ்’ என்ற பட்டத்தை பெற்றுள்ளார். வழக்கமாக கிறிஸ் கெயில் ( 41வயது) மூத்த வீரர் என்பதால், தொடக்க ஆட்டத்தில் அவரை இறக்காமல் , இறுதிகட்டத்தில் அவரை விளையாட வைப்பர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் அணியின் கேப்டனான கே .எல் .ராகுல் அவரை தொடக்கத்திலேயே விளையாட வைத்துள்ளார்.