அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், சமீபத்தில் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு கொலைகள் சம்பவம் நடைபெற்றது. உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒன்று உயிர் .அந்த உயிரை எடுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. கொலை செய்யப்பட்ட அந்த இரு நபர்கள், அவர்களுக்கு குடும்பங்கள் எல்லாம் இருக்கிறது.
அந்த குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன் . அதே வேளையில் இந்த கொலையை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியை சார்ந்தவர் இருந்தாலும் சரி, எந்த அமைப்பு, எந்த ஜாதியை, எந்த சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி ,சட்ட ரீதியில் அவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தை பற்றி நான் விசாரித்தேன். நான் மட்டுமல்ல எங்கள் கட்சியை சார்ந்தவர்கள்… பொதுவானவர்கள்… காவல் துறையிடம் விசாரித்தோம். அதுமட்டுமல்ல புரட்சி பாரதத்தின் தலைவர் அன்பு ஜகன் மூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து விசாரித்தார். அவர் சொன்ன கருத்து ஊடகத்தில் எல்லாம் வந்து இருக்கிறது. நானும் அவரிடம் பேசி இருக்கிறேன். அங்கே நடந்தது என்னவென்றால், இளைஞர்கள் இரு பிரிவாக…. அதாவது இவர்களுக்கெல்லாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நீண்ட காலமாக தெரிந்தவர்கள்.
இவர்கள் ஒரே இடத்தில் மது அருந்தி கொண்டு இருந்தார்கள். அந்த மது போதையில் வாக்குவாதம் என்ற நிலையில் பிறகு வேறு விதமாக இவர்கள் அவர்களை அடித்தார்கள் ஒரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் காயங்களோடு…. அதாவது போதையில் இவர்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். அடித்து அதில் இரண்டு பேர் இறந்து விட்டார்கள் இதுதான் நடந்தது.
இதில் நான் மட்டும் விசாரிக்கவில்லை, எங்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, பொதுவானவர்கள், காவல்துறையினர் ,பிறகு ஜெகன் மூர்த்தி அவர்கள். காரணம் ஏன் நான் ஜெகன்மூர்த்தி அவர்களை சொல்கிறேன் என்றால், கொலை செய்யப்பட்டவர்கள் அவர் கட்சியை சார்ந்தவர்கள். அவர் உடனடியாக நேரில் அந்த கிராமத்திற்கு சென்று, இறந்த அந்த நபர்களோடு குடும்பத்தினரிடம் விசாரித்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர்களையும் விசாரித்தார்கள், அந்த ஊரிலே விசாரித்தார், காவல்துறையை விசாரித்தார், பக்கத்தில் அவர்கள் கட்சிக்காரர் எல்லோரையும் விசாரித்து… அவர்கள் சொன்னது இதைத்தான் சொல்கிறார்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம். அவருக்குள்ளே குடித்துக்கொண்டு அடித்துவிட்டார், அடித்ததில் இரண்டு பேர் இறந்து விட்டார்கள். இதை ஒரு சில கட்சிகள்…. அதுவும் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அவரை சார்ந்த கூட்டணி கட்சி திருமாவளவன் அவர்களும், இது ஏதோ ஜாதி பிரச்சனை, இது ஏதோ கட்சி பிரச்சனை, இது ஏதோ ஒரு அரசியல் பிரச்சினை, இது ஏதோ தேர்தல் பிரச்சினை இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.