கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆண் நபர் உயிரிழந்தார். மேலும் மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.