கொரோனா ஊரடங்கால் சிறுவர்-சிறுமியர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் சுவிட்ஸ் மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 49 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேபோல் 2021 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. அதிலும் 21 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலை முயற்சிகளுக்கும் கொரோனாவிற்கும் இடையே உள்ள தொடர்பு இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக அனுபவங்களை பெரிதும் சார்ந்து இருக்கும் சிறுவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் சிறுமிகளே என்றும் தெரியவந்துள்ளது. இந்த சிறுவர் சிறுமியரை கருத்தில் கொண்டு கொரோனா சூழலில் இருந்து அதிகாரிகள் நம்மை வெளியே கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.