இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
Happy Ugadi to you all..:)#ఉగాది #ಯುಗಾದಿ #GudiPadwa #नवसंवत्सर #தமிழ்ப்புத்தாண்டு #വിഷു #ਵੈਸਾਖੀ #RRRMovie @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @RRRMovie @DVVMovies @PenMovies @LycaProductions pic.twitter.com/cnAqZi1DXe
— rajamouli ss (@ssrajamouli) April 13, 2021
சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கும் ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஆர் ஆர் ஆர் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் மக்கள் கொண்டாடுகின்றனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.