Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த கூட்டம்… மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை …!!!

சென்ற ஆண்டைப் போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும்  என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பற்றி ஆலோசனை நடத்த நேற்று சிக்பள்ளாப்பூர் வந்துள்ளார். சிக்பள்ளாபூர்  மாவட்ட கல்வித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சுரேஷ்குமார் கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நடத்துவது குறித்து 2 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடமும் மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை கேட்டறிந்து நிபுணர்களுடன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கொரோனாபரவலுக்கு மத்தியில் சென்ற ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. இரண்டாம் ஆண்டுக்கான பொது தேர்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

அதே போல இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு தேர்வு சிறப்பான முறையில் நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டத்திற்கும் சென்று அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பொது தேர்வினை நடத்த முடிவு செய்துள்ளோம். மாணவ மாணவிகளுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு சிறப்பான முறையில் தேர்வு நடத்தப்படும். கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் நிலையில் 8,75,798 எழுத உள்ளனர். பி.யூ.ஸ். இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு ஜூன் மாதம் 21ஆம் தேதி 7,01,651 எழுதப்பட்ட உள்ளனர் எழுத உள்ளனர். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 3,029 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மாணவர்களுக்கு அதிக சுமை கொடுக்கவேண்டாம் என்பதற்காக வழக்கமான பாடத்திட்டத்தில் இருந்து 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டைப் போலவே பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பலத்த கட்டுப்பாடுகளுடன் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பயம் அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |