Categories
தேனி மாவட்ட செய்திகள்

“21 தொகுதிக்கும் 2 வாரமா வரல”, எல்லாரும் அதுக்கு என்ன செய்வோம்…. காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரில் மொத்தமாக 21 வார்டு பகுதிகள் அமைந்துள்ளது. இதிலிருக்கும் மக்களுக்கு லோயர்கேம்பிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடலூரிலிருக்கும் பொதுமக்களுக்கு கடந்த 2 வாரங்களாகவே தண்ணீர் வினியோகம் சரிவர வழங்கப்படாமல் இருந்திருக்கிறது.

இதனால் அப்பகுதியிலிருக்கும் மக்கள் கம்பம்-கூடலூர் ரோட்டில் குடிதண்ணீர் வேண்டி போராட்டத்தின் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |