அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தநிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.