Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு வெளியில் துப்பாக்கிசூடு.. தப்பியோடிய மர்மநபரால் பரபரப்பு..!!

பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/martopirlo1/status/1381583141744283648

இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் உடனடியாக தப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிரிழந்த அந்த ஆண் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அந்த மர்ம நபர் திடீரென்று ஏன் தாக்குதல் நடத்தினார்? என்பதற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்தில் காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ சேவை குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |