Categories
மாநில செய்திகள்

கன்னித்தன்மை சோதனை…. மாமியாரின் கேவலமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் மருமகள்கள்….!!

இரண்டு பெண்களுக்கு நடத்தப்பட்ட கன்னித்தன்மை சோதனை தோல்வியடைந்ததால் மாமியார் மற்றும் கணவர் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கஞ்சர்பட் என்ற சமூகத்தில் உள்ள இரண்டு பெண்களை அண்ணன் தம்பி இருவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு மாமியார் அவர்களின் சமூகத்தின் நடைமுறைபடி மருமகள்களின் கன்னித்தன்மையை சோதனை செய்துள்ளார். அவர் சோதனை செய்த பின்பு தனது மகன்களிடம் வந்து இந்தப் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அந்தப் பெண்களின் கணவர்களும் மாமியாரும் அவர்களை துன்புறுத்தி கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி கூறியுள்ளனர். இதனை அவர்கள் மறுத்ததால் சாதி பஞ்சாயத்து கூட்டி அந்த பெண்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் கணவர்கள், மாமியார் மற்றும் சாதி பஞ்சாயத்து பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |