மதுரையிலிருக்கும் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் மாரியம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மாரியம்மனின் அழகையும், பிரம்மாண்ட தோற்றத்தையும் பார்ப்பதற்காகவே அனைவரும் இக்கோவிலுக்கு வருவார்கள்.
இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு, நறுமண மலர்களால் அலங்காரம் நடைபெற்றது. மேலும் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்குள் சுற்றி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.