சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கிழே விழுத்த மயிலை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வனவிலங்குகளை மக்கள் வேட்டையாடி விடக்கூடாது என்பதற்காகவும் வனவிலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து பறந்து வந்த மயில் ஒன்று நாயக்கன்பட்டியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது.
இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மயிலை விரட்டியுள்ளனர். அப்போது மயில் மாடியிலிருந்து கிழே விழுந்துள்ளது. இதனால் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயிலை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.