அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் ,சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷங்கர் ரெட்டி களமிறங்கிவார் ,என்று எதிர்பார்க்கப்படுகிறது .
14 வது ஐபில் போட்டி தொடரில் , கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த 188 ரன்களை, டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே அசால்டாக வெற்றியை கைப்பற்றியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ,டெல்லி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக ,அந்த அணியின் பவுலின் மிகவும் மோசமானதாக காணப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி டெல்லி அணி சுலபமாக வெற்றியை கைப்பற்றியது. கடந்த சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் பாதியிலேயே வெளியேறியது.
இதனால் அந்த நிலை இந்த சீசனில் வரக்கூடாது ,என்பதற்காக பேட்டிங்கை சிறப்பாக செய்த சிஎஸ்கே அணி ,பவுலிங்கில் தவற விட்டது. வெளிநாட்டு பவுலிங் வீரர்களான லுங்கி நிகிடி , பெஹரன்டார்ஃப் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் ,நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடாமல் போனது. இதற்கடுத்து சிஎஸ்கே விளையாடும் அடுத்த போட்டிக்கு, பவுலர்களை கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும் ,என்று ரசிகர்கள் இடையே கோரிக்கை எழுந்து வருகிறது. சிஎஸ்கே அணி நடந்த ஐபிஎல் ஏலத்தில் ,ஆந்திராவை சேர்ந்த ஹரிஷங்கர் ரெட்டி என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் அடுத்து நடைபெறும் போட்டியில் ,ஹரி ஷங்கர் நிச்சயமாக இறங்குவார் என்றும், இவர் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப் படுவதாகவும் கூறுகின்றனர்.
Hari Shankar Reddy Deserves a Chance in the @ChennaiIPL side. He is a good bowler who can atleast maintain a Pace around 140kmph and at the end he is an Indian player so you could get extra Foreign space for Santener or Tahir.#WhistlePodu • #Yellove • #HariShankarReddy
— Shubham 🇮🇳 (@Kings_357) April 11, 2021
Gone through some random cricket videos of #HariShankarReddy's Bowling. His express pace and accuracy looks very impressive 👍🏻.#CSK can definitely replace D.Chahar with this man to improvise bowling attack especially during powerplay.#Yellove #விசில்போடு pic.twitter.com/ab5hfxaFXR
— 🦅 𝘽𝙇𝘼𝘾𝙆𝙔 ᵀᴹ (@BlackyDaa) April 12, 2021