நடிகை பிரியா பவானி சங்கரை கலாய்த்து நடிகர் சதீஷ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் இந்தியன்2, பத்துதல, ருத்ரன் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை பிரியா கோல்டன் நிற சேலை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு கேப்ஷனாக ‘நான் என்ன யோசிக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.
Sathish kooda heroine aa nadikka mudiyaama poche…. 🤔🤓🤪 https://t.co/c0QPq7H9Zp
— Sathish (@actorsathish) April 11, 2021
Apdi solladheeenga Gopaaaaal 😩😂 @actorsathish https://t.co/q7aK1OcVl8 pic.twitter.com/6PmDeCo4ZI
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 11, 2021
இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிகை பிரியாவின் இந்த பதிவுக்கு பதிலளித்துள்ளார். அதில் ‘சதீஷ் கூட ஹீரோயினா நடிக்க முடியாம போச்சே’ என பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு பதில் கமெண்ட் அளித்த பிரியா பவானி சங்கர் அப்டி சொல்லாதீங்க கோபால் என பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் . இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.