நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட்ட தெருக்களின் எண்ணிக்கை 1106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு முன் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.