இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி ரன்களை எடுக்க முடிந்தது .
நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராகுல்- ராணா ஜோடியின் பேட்டிங் ஆகும். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்துகொண்டிருந்த கொல்கத்தா அணி ,மிடில் லெவலில் சற்று தடுமாற்றத்தை கண்டது. இதனால் கொல்கத்தா அணி ரன்களை குவிக்க முடியாது என்று நினைத்திருந்தனர்.
ஆனால் இறுதி கட்டத்தில் களமிறங்கிய, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் கொல்கத்தாவின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்குள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ,கடைசி நேரத்தில் கொல்கத்தாவிற்கு ரன்களைக் குவித்தார். அந்த பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை அடித்த விளாசினார். நேற்று இவருடைய ஸ்ட்ரைக் ரேட்244.44 இருந்தது. நேற்று நடந்த போட்டியின் மூலமாக ,தன்னை இந்திய அணியில் விளையாடுவதற்கு நிராகரித்து வந்த கோலிக்கு ,சிறந்த பதிலடி கொடுத்துள்ளார் ,என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த உலக கோப்பை தொடருக்குப் பின், அணியில் தினேஷ் கார்த்திக் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.