ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் தொடர்ந்து தமிழகத்தில் உயிரிழந்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளியான எஸ்தர் மேரி என்பவர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்ற சில நாட்களுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் வடநாட்டில் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளது.. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.