Categories
மாநில செய்திகள்

பண்ணுறதெல்லாம் நீங்க…! எங்களை ”ரவுடின்னு” சொல்லுறீங்க…. பாமகவை சீண்டிய திருமா …!!

அரக்கோணம் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய தோழர்களை நாம் யாராவது  சாதி வெறியர் என்று சொல்கிறோமா? கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றக்காவது நாம் அப்படி சாதி அடிப்படையில் நாம் விமர்சித்து இருக்கிறோமா…. இவர்கள் அப்படி வளர்க்கப்படுகிறார்கள், திட்டமிட்டு வளர்க்கப்படுகிறார்கள்.

விக்ரமன் சொன்னதை போல் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தக் கூடியவர்கள் வெளிப்படையாக காவல்துறையின் பாதுகாப்போடு ரயில்களை மறித்து கல்லால் எடுத்துக் அடிக்கிறார்கள். கல்லால் அடிக்கச் சொல்லி யார் வழிகாட்டுவது? கருப்பன் காட்டுக்குள்ளே மறைந்திருந்து பேருந்துகளை கொளுத்த சொல்லி யார் வழிகாட்டுவது ?அப்பாவி குடிசைகளை கொளுத்த வேண்டும் என்று யார் தூண்டி விடுவது ? தன்னுடைய சொந்த சமூகத்தைச் சார்ந்த இளம் தலைமுறையை இப்படி சாதி வெறியூட்டி  வன்முறை கும்பலாக வளர்த்தெடுப்பது யார் ?

மேலும் ஆபத்தான ஒரு அரசியலை, சாதிவெறி அரசியலை கையில் எடுத்து இருக்கின்ற தீயசக்தி யார் ? இதை ஜனநாயக சக்தி புரிந்து கொள்ள வேண்டாமா….. உண்மையிலேயே கட்டப்பஞ்சாயத்து பேசக்கூடிய கும்பல் நம்மை பார்த்து கட்டப்பஞ்சாயத்து என்று சொல்கிறது. உண்மையிலேயே ரவுடி தனம் செய்யக்கூடிய கும்பல் நம்மை பார்த்து ரவுடிகள் என்று சொல்கிறது. ஊர் உலகத்திற்கு தெரியும்…. யார் ரவுடிகள் ? யார் கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் என்று ?

எத்தனை சதவீதம் இங்கு ஓட்டு இருக்கிறது என்று இரண்டு திராவிட கட்சிகளையும் பிளாக் மெயில் செய்து பேரம் பேசுவது கூட கட்டப்பஞ்சாயத்து தான். அது கட்டப்பஞ்சாயத்து இல்லையா ? எங்களைப்போல் திறந்த புத்தகமாக அரசியல் அடிப்படையில்… கொள்கை அடிப்படையில் அடிப்படையிலா…  நீங்கள் கூட்டணி உறவு வைத்துக் கொள்கிறீர்கள். 5 வருடத்திற்கு முன்னாடி கூட்டணி உறவை தீர்மானித்துக் கொள்கின்றோம்  எந்த கண்டிஷனும் கிடையாது என திருமாவளவன் பாமகவை கடுமையாக சாடினார்.

Categories

Tech |