கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர்.
கோடை காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நாம் சில வகை பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அவை பற்றி தெரிந்து கொள்வோம்.
வெயிலுக்கு உகந்த பழம் என்றால் முதலில் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் மற்றும் பிற பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை நாம் சாப்பிட வேண்டும்.
பொதுவாக தயிர் என்பது குளிர்ச்சியான உணவாக பலராலும் அறியப்பட்டு வருகிறது. தயிர் செரிமான மண்டலத்தில் மந்தத்தை ஏற்படுத்தி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அதனால் தயிரை கடைந்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய மோரை நாம் அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் வெயிலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
புதினா இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும். புதினா துவையல், புதினா சட்னி போன்ற ஏதாவது எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் . அலர்ஜி பிரச்சினை, தலைவலி ,வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
நீர் நிறைந்த உணவுகளில் மிக முக்கியமான ஒன்று வெள்ளரிக்காய். கோடைக் காலத்தில் இந்த காயை சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.