பெண் மருத்துவர் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் காந்திநகர் பகுதியில் நிலேஷ் சவுகான்-மனிஷா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நிலேஷ் காலையில் தூங்கி எழுந்தபோது மனைவி அருகில் இல்லாததால் பதறியுள்ளார். பின்னர் அவர் வீடு முழுவதும் மனைவியை தேடியபோது குளியலறையில் மனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டதும் நிலேஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மனிஷாவின் சகோதரருக்கு நிலேஷ் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் மனிஷாவின் சகோதரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அவர்கள் விரைந்து வந்து மனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கையில் மனிஷா சில காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு நல்லபடியாக தான் இருந்துள்ளது என மனிஷாவின் சகோதரர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இறப்பதற்கு முந்தைய தினம் மனிஷா தனது கணவருடன் வெகுநேரமாக பேசியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.