முன்னணி நடிகர் சூர்யா, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இப்படத்தினை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து மாரி செல்வராஜ் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆகையால் இத் தகவலை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.